search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பட்ஜெட்: ECR-ல் மேம்பாலம் அமைக்க ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு
    X

    தமிழக பட்ஜெட்: ECR-ல் மேம்பாலம் அமைக்க ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு

    • மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.
    • கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக பேருந்து முனையம் அமைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கலான பட்ஜெட்டில் வெளியான சில அறிவிப்புகள்:-

    * திருவான்மியூர் - உத்தண்டி இடையே 14.2 கி.மீ. நீளத்திற்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளுக்கான ரூ.2,100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * சென்னை மெட்ரோ ரெயிலின் மூன்றாவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

    * மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். கோவளம் அருகே உப வடி நிலத்தில் 3010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். சென்னையின் 6-வது நீர்த்தேக்கமாக இது அமையும்.

    * கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக பேருந்து முனையம் அமைக்கப்படும்.

    * நிலமற்ற ஏழை குடும்பங்களுக்கு விலையின்றி இதுவரை 10 லட்சத்திற்கும் மேலான பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டில் மேலும் 5 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.

    * ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும். அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்.

    Next Story
    ×