search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மத்திய அரசுக்கு இப்போதாவது வெட்கம் வந்து நிதியை தருவார்கள் என நம்புகிறேன்: ப.சிதம்பரம்
    X

    மத்திய அரசுக்கு இப்போதாவது வெட்கம் வந்து நிதியை தருவார்கள் என நம்புகிறேன்: ப.சிதம்பரம்

    • சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு 2152 கோடி ரூபாயை விடுவிக்கவில்லை.
    • இந்த நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது.

    சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழக அரசு மத்திய அரசு வழங்கக்கூடிய 2,152 கோடி ரூபாயை சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து தமிழக அரசு விடுவித்துள்ளது என பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவித்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு ப.சிதம்பரம் "மத்திய அரசுக்கு இப்பொழுதாவது வெட்கம் வந்து, அவர்கள் நிதியை தருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.

    முன்னதாக,

    2025-2026ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது "ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) கீழ், பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    குறிப்பாக, மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை உறுதிசெய்யும் எண்ணும் எழுத்தும் திட்டம். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, தொலைதூரக் குடியிருப்புகளிலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து சென்றிட போக்குவரத்துப்படி, ஆசிரியர்களின் ஊதியம், மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கிடும் உயர்கல்வி வழிகாட்டி, மாணவர்களின் தனித் திறன்கள் மிளிர்ந்திட கலைத் திருவிழா, கல்விச் சுற்றுலா, இணைய வசதி உள்ளிட்ட பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டங்கள் மாணவரின் கல்வி நலன் சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

    எனினும், இந்த ஆண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

    ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும், மாணவர் நலன் கருதி அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி ஒரு துளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்குரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது" எனக் கூறினார்.

    Next Story
    ×