என் மலர்
தமிழ்நாடு

எங்கள் கல்வி.. எங்கள் உரிமை..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

- தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காமல் இருப்பதே சரி.
- தமிழக மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு வைக்கும் வேட்டு புதிய கல்விக்கொள்கை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலி மற்றும் விழா மலரையும் அவர் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காமல் இருப்பதே சரி.
தமிழக மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு வைக்கும் வேட்டு புதிய கல்விக்கொள்கை" என்றார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு லட்சம் பேருக்கு மேல் கலந்துகொண்ட தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டை சுட்டிக்காட்டி, தனது எக்ஸ் தள பக்கத்தில் "எங்கள் கல்வி எங்கள் உரிமை" என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், " பெற்றோர்கள் தான் நமது முதல் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தான் நமது இரண்டாவது பெற்றோர்" என்றார்.
ஒரு இலட்சம் பேருக்கு மேல் கலந்துகொண்ட தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு!????பெற்றோர்கள்தான்- நமது முதல் ஆசிரியர்கள்??!??ஆசிரியர்கள்தான்- நமது இரண்டாவது பெற்றோர்????!@Anbil_Mahesh#எங்கள்கல்விஎங்கள்உரிமை pic.twitter.com/TttiehtUBG
— M.K.Stalin (@mkstalin) February 22, 2025