என் மலர்
தமிழ்நாடு
இளைஞர்களே.. மாணவர்களே.. விளையாட்டு வீரர்களே.. களம் காணுங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 3 சதவீதம் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசில் பணி ஆணை வழங்கப்பட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 3 சதவீதம் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசில் பணி ஆணைகளை வழங்கினார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
திறமைமிகு தமிழ்நாட்டின் இளைஞர்களே… மாணவர்களே… விளையாட்டு வீரர்களே…
களம் காணுங்கள்; உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்; நம் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேருங்கள்!
உங்கள் வாழ்க்கையை அக்கறையோடு கவனித்துக் கொள்ள நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது.
களம் நமதே
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
திறமைமிகு தமிழ்நாட்டின் இளைஞர்களே… மாணவர்களே… விளையாட்டு வீரர்களே…களம் காணுங்கள்; உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்; நம் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேருங்கள்!உங்கள் வாழ்க்கையை அக்கறையோடு கவனித்துக் கொள்ள நமது #DravidianModel அரசு இருக்கிறது! #களம்_நமதே!… pic.twitter.com/4uHl7tSlAp
— M.K.Stalin (@mkstalin) December 23, 2024