என் மலர்
தமிழ்நாடு
மகளிருக்கு இலவச பயணம் அவசியமா? என ஆய்வு
- இலவச சலுகை பயணம் பயன் உள்ளதாக இருப்பதாக 90 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர்.
- இலவச பயண சலுகையால் மட்டுமே கல்வியை தொடர முடிகிறது என 62 சதவீதம் மாணவர்கள் பதில் அளித்துள்ளனர்.
நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் குறிப்பிட்ட வகையிலான பஸ்களை தமிழக அரசு இயக்கி வருகிறது. அதேபோன்று அனைத்து வகையான பஸ்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த 2 சலுகைகளும் அவசியமா? என்பது குறித்து தணிக்கை துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது.
அந்த ஆய்வின்படி, இலவச சலுகை பயணங்களை பொறுத்தமட்டில் ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இலவச சலுகை பயணம் பயன் உள்ளதாக இருப்பதாக 90 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர். கட்டணம் செலுத்தும் பயணிகளை போல் நடத்தப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு 69 சதவீதம் பேர் இல்லை என பதில் அளித்துள்ளனர்.
இலவச பயண சலுகையால் மட்டுமே கல்வியை தொடர முடிகிறது என 62 சதவீதம் மாணவர்கள் பதில் அளித்துள்ளனர்.
இலவச பயணத்தால் ஒவ்வொருவரும் மாதம் தோறும் ரூ.637 சேமிக்க முடியும் என மாணவர்கள், பெண்கள் தெரிவித்துள்ளனர்.