என் மலர்
தமிழ்நாடு
X
வேலை தேடுவோர் கவனத்திற்கு... நாளை மிஸ் பண்ணிடாதீங்க...
Byமாலை மலர்23 Jan 2025 1:40 PM IST
- சுயவிவரக் குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
- பங்கேற்க விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையின் அனைத்து வேலைவாய்ப்பு மையங்களும் இணைந்து கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.
இதில் 8-ம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை மற்றும் அறிவியல், ஐடி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவர்கள் பங்கேற்கலாம். 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைதேடும் இளைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
பங்கேற்க விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X