என் மலர்
தமிழ்நாடு
சீமான் வீடு நாளை முற்றுகை- த.பெ.தி.க. பொதுச்செயலாளர்
- பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்கு சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் வீடு முற்றுகையிடப்படும்.
- தமிழக அரசு சீமான் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.
மேலும், காவல் நிலையங்களில் சீமான் மீது 60-க்கு மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 22-ந்தேதி சீமான் வீடு முற்றுகையிடப்படும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்து இருந்தார்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற இருப்பதாகவும், முற்றுகை போராட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்நிலையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்கு சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் வீடு முற்றுகையிடப்படும்.
* சீமானும் ஆதாரம் தரவில்லை. அவருக்கு ஆதரவாக பேசிய அண்ணாமலையும் ஆதாரம் தரவில்லை.
* நல்ல மனிதராக இருந்திருந்தால் ஆதாரம் கொடுக்க முடியாததற்கு சீமான் மன்னிப்பு கேட்டு இருப்பார்.
* தமிழக அரசு சீமான் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.