என் மலர்
தமிழ்நாடு
சங்ககிரி அருகே பஞ்சு ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீவிபத்து
- திடீரென லாரியின் உள்பகுதியில் இருந்து தீப்புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- இரவு நேரத்தில் பஞ்சு லோடு ஏற்றி சென்ற லாரியில் திடீரென தீப்புகை ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சங்ககிரி:
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் செல்வம் (40). இவர் கண்டெய்னர் லாரியில் சத்தியமங்கலத்தில் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கி சென்றார். இரவு 7 மணி அளவில் பவானி - சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் சங்ககிரி வி.என். பாளையம் என்ற இடத்தில் டிரைவர் செல்வம் லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி லாரியின் சக்கரங்களில் காற்று சரியாக உள்ளதா? என சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென லாரியின் உள்பகுதியில் இருந்து தீப்புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சங்ககிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி ரமேஷ் குமார் தலைமையிலான மீட்பு படையினர் விரைந்து வந்து லாரியின் பின் கதவுகளை திறந்து தண்ணீர் பாய்ச்சி தீ பரவாமல் தடுத்தனர். மேலும் லாரியில் இருந்த பஞ்சு லோடுகளை கீழே இறக்கி தீப்பிடித்த பேல்களை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
லாரியில் தீப்புகை ஏற்பட்ட இடத்தின் அருகே தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி போலீசார் வாகன ங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் லாரியில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் பஞ்சு லோடு ஏற்றி சென்ற லாரியில் திடீரென தீப்புகை ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.