என் மலர்
தமிழ்நாடு
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து- இனிப்புகள் வழங்கி ஆடி, பாடி மகிழ்ந்த கிராம மக்கள்
- டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்வதாக அறிவித்தது.
- மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்வதாக அறிவித்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
அரிட்டாபட்டி பெண்கள் மண்ணில் விழுந்து வணங்கி ஆனந்தக் கண்ணீர் விட்டனர். அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மக்கள் ஆனந்தமாக கொண்டாடி வருகின்றனர்.
முதியவர்கள் பாடல்களுக்கு நடனமாடியும் மகிழ்ந்தனர்.
இது அரிட்டாப்பட்டி மக்களுக்கு மறக்க முடியாத வெற்றியாகும். இதுகுறித்து கூறிய அரிட்டாப்பட்டி மக்கள், " எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மத்திய அரசு திட்டத்தை கைவிட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ வழி செய்திருக்கிறார்கள். அரிட்டாப்பட்டி மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த மற்ற கிராம மக்களுக்கும் நன்றி.
டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி" என்றனர்.