search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூத்தாடி என்ற கூற்றைச் சுக்கு நூறாக உடைத்தவர் எம்.ஜி.ஆர். - த.வெ.க. தலைவர் விஜய்
    X

    கூத்தாடி என்ற கூற்றைச் சுக்கு நூறாக உடைத்தவர் எம்.ஜி.ஆர். - த.வெ.க. தலைவர் விஜய்

    • தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் இன்று.
    • அ.தி.மு.க.-வினர் மாநிலம் முழுக்க கேக் வெட்டி கொண்டாடினர்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.-இன் 108-வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதி, நாசர், அன்பரசன், மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    மேலும், தமிழகம் முழுக்க அ.தி.மு.க. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எம்.ஜி.ஆர்.-க்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "அளவற்ற வறுமையைத் தாண்டினார்.

    கூத்தாடி என்ற கூற்றைச்

    சுக்குநூறாக உடைத்து,

    தமிழக அரசியல் வரலாற்றின்

    மையம் ஆனார்.

    அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.

    அவரே தமிழக அரசியலின்

    அதிசயம் ஆனார்.

    இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்

    பிறந்தநாள் வணக்கம்.," என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×