search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செல்பி பாயிண்ட்-ஆக மாறிய த.வெ.க மாநாட்டு திடல்
    X

    "செல்பி பாயிண்ட்"-ஆக மாறிய த.வெ.க மாநாட்டு திடல்

    • தவெக மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகை தந்தனர்.
    • மாநாட்டில் சுமார் 8 லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    த.வெ.க மாநாட்டிற்காக இரவும் பகலுமாக திடல் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்றது. பெண்கள் அமர தனி இடம், விஐபிகளுக்கு தனி இடம் என திடல் முழுவதும் தொண்டர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகை தந்தனர். மாநாட்டிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளாவில் இருந்தும் மக்கள் வருகை தந்தனர்.

    சுமார் 3 மணியளவில் மாநாடு தொடங்கியது. பல்வேறு நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளனர்.

    மாநாட்டு திடல் வெளியில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் எல்இடி திரை மூலம் விஜய்யின் உரையை கண்டுகளித்தனர். இதுப்போன்ற பிரம்மாண்ட அலங்காரத்தை வேறு எங்கும் கண்டதில்லை என மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இந்நிலையில், மாநாட்டிற்கு நேற்று செல்ல முடியாதவர்களும், அந்த வழியாக செல்லும் பொது மக்கள் சிலர், மாநாட்டு திடலில் முகப்பு வாயில் முன்பும், மேடை மற்றும் கட் அவுட் முன்பும் செல்பி எடுத்துச் செல்கின்றனர்.

    Next Story
    ×