search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    த.வெ.க. மாநாடு -  விஜய் உரையின் முக்கிய ஹைலைட்ஸ்
    X

    த.வெ.க. மாநாடு - விஜய் உரையின் முக்கிய ஹைலைட்ஸ்

    • பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தான் எங்கள் கட்சியில் முழுமுதல் கொள்கை எதிரி.
    • திராவிடமும் தமிழ்த்தேசியமும் இந்த மண்ணுடைய இரு கண்கள்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மாநாட்டில் விஜய் பேசிய முக்கியமான பாயிண்ட்ஸ்:

    1. பெரியார் எங்கள் முதல் கொள்கை தலைவர். ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவது இல்லை. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அறிஞர் அண்ணா கூறிய ஒன்றே குலம் ஒருவனே தேவன் தான் எங்களின் நிலைப்பாடு. ஆனாலும் பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமீக நீதி, பகுத்தறிவு சிந்தனை ஆகிய எல்லாவற்றையும் நாம் முன்னெடுத்து செல்ல போகிறோம்.

    2. பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தான் எங்கள் கட்சியில் முழுமுதல் கொள்கை எதிரி. அடுத்ததாக திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு பெரியார், அண்ணா பேரை பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் குடும்ப சுயநல கூட்டம் தான் நம்முடைய இரண்டாவது எதிரி

    3. என்னுடைய சொந்த தங்கை வித்யா இறந்தபோது எனக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு தான் தங்கை அனிதா இருந்தபோதும் எனக்கு ஏற்பட்டது. தகுதி இருந்தும் தடையா இருக்கிறது நீட் தேர்வு.

    4. கொள்கை அளவில் திராவிடத்தையும் தமிழ்த்தேசியத்தையும் நாங்கள் பிரித்து பார்க்கப்போவது கிடையாது. திராவிடமும் தமிழ்த்தேசியமும் இந்த மண்ணுடைய இரு கண்கள்.

    5. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில் சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது தான் நமது நோக்கம்.

    6. எங்களோடு சேர்ந்து பயணிக்க விரும்பும் அரசியல் கட்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு வழங்கப்படும், அதிகாரப் பகீர்வு வழங்கப்படும்,

    7. இந்த மாற்று அரசியல் மாற்று சக்தி, அதை செய்யுறேன், இதை செய்யுறேன் என்று சொல்லி ஏமாற்று வேலை செய்ய நான் இங்கு வரவில்லை. ஏற்கனவே இருக்கும் 11-12 இருக்குற அரசியல் கட்சிகளில் நானும் ஒரு ஆளாக மாற்று அரசியல் என்று சொல்லிக்கொண்டு இருக்க நான் இங்கு வரவில்லை. மாற்று அரசியல் மாற்று சக்தி என ஏமாற்றுவது எங்கள் வேலை இல்லை. ஏமாற்று சக்திகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பது தான் எங்களது வேலை.

    8. பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் பற்றிய கதையை குட்டி ஸ்டோரியாக விஜய் சொன்னார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஈடுபட்ட தலையாலங்கானத்து போரின் மூலம் அவரது வீரம் போற்றப்பட்டது. விஜய் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளதால் சிறுவன் பாண்டிய நெடுஞ்செழியன் சூழலில் தற்போது தான் இருப்பதாக விஜய் கூறியுள்ளார்.

    Next Story
    ×