என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பிப்., 26-ந் தேதி த.வெ.க. பொதுக்குழு, செயற்குழு? பிப்., 26-ந் தேதி த.வெ.க. பொதுக்குழு, செயற்குழு?](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9266336-vijay.webp)
X
பிப்., 26-ந் தேதி த.வெ.க. பொதுக்குழு, செயற்குழு?
By
மாலை மலர்13 Feb 2025 3:01 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
- 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் இதே கூட்டத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி 2 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளை நியமித்த விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து 2 நாட்களாக பல்வேறு ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு மற்றும் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் இதே கூட்டத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
Next Story
×
X