search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரந்தூர் செல்ல தவெக தலைவர் விஜய்க்கு போலீசார் அனுமதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பரந்தூர் செல்ல தவெக தலைவர் விஜய்க்கு போலீசார் அனுமதி

    • பரந்தூர் கிராமத்துக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வெளியாட்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
    • விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமானம் நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதையடுத்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 900 நாட்களை கடந்து நடந்து வரும் போராட்டத்தில் பரந்தூர் கிராமத்துக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வெளியாட்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

    இதனிடையே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் போராட்ட குழுவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், நாளை மறுநாள் (20-ந்தேதி) பரந்தூர் கிராம மக்களை விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டது. இருப்பினும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதனால் விஜய் பரந்தூர் செல்வதில் சந்தேகம் எழுந்தது. இதனிடையே, விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை விஜய் சந்திப்பதற்காக நடைபெற்று வந்த பணிகளை நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த நிலையில், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பாளர்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் வரும் திங்கட்கிழமை ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார்.

    இதனால் விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×