என் மலர்
தமிழ்நாடு
2-ம் ஆண்டு தொடக்க விழா: கட்சி கொடியேற்றி, கொள்கை தலைவர்கள் சிலையை திறந்து வைத்த த.வெ.க. தலைவர் விஜய்
- த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
- கட்சி அலுவலகத்தில் சிலைகள் திறப்பு.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டாத அறிவித்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் கொடி, பாடல் மற்றும் கொள்கைகள் என கட்சி சார்ந்த அறிவிப்புகள் வெளியாகி வந்தன.
மேலும், கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை த.வெ.க. தலைவர் விஜய் பிரமாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.
#WATCH | Tamil Nadu: Actor and Tamilaga Vettri Kazhagam (TVK) chief Vijay takes part in events at the party HQ in Panaiyur, Chennai on the party's first anniversary.(Video Source: TVK) pic.twitter.com/5UukHex9Y3
— ANI (@ANI) February 2, 2025
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிக்கப்பட்டு இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று (பிப்ரவரி 2) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய் த.வெ.க. கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள த.வெ.க. கொள்கை தலைவர்களான தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலையை த.வெ.க. தலைவர் விஜய் திறந்து வைத்தார். மேலும், சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.