search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    த.வெ.க-வின் ரமலான் நோன்பு: நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் ஆதவ் அர்ஜூனா நேரில் ஆய்வு
    X

    த.வெ.க-வின் ரமலான் நோன்பு: நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் ஆதவ் அர்ஜூனா நேரில் ஆய்வு

    • நோன்பு திறப்பில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கும் விருந்தளிக்க உள்ளார்.
    • 15 பள்ளிவாசல் இமாம்களுக்கு கட்சி சார்பில் அழைப்பு விடுப்பு.

    சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று நோன்பு திறந்து வைக்கிறார். மேலும், நோன்பு திறப்பில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கும் அவர் விருந்தளிக்க உள்ளார்.

    இந்நிலையில், நளை நடைபெறவுள்ள நோன்பு நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சாரம் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சுமார் 2000 பேர் வரை கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, டேபிள், நாற்காலி எதுவும் இன்றி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் தரையில் அமர்ந்து நோன்பு திறந்து தொழுகையில் ஈடுபடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நாளை நடைபெறவுள்ள இஃப்தார் நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள 15 பள்ளிவாசல் இமாம்களுக்கு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், விஜய் வருகை ஒட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    Next Story
    ×