என் மலர்
தமிழ்நாடு

X
மீனவர்களை திரட்டி த.வெ.க. போராட்டம்- விஜய் பங்கேற்பதாக தகவல்
By
மாலை மலர்9 March 2025 12:47 PM IST

- ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக போலீஸ் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- போராட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவும், இலங்கை கடற்படையினரை கண்டித்தும் த.வெ.க. சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக போலீஸ் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், போராட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மிகப்பெரிய அளவில் மீனவர்களை திரட்டி கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை அடுத்த வாரத்தில் நடத்த த.வெ.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
X