என் மலர்
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் அடையாளங்களை அழிக்க முயற்சி செய்கிறார் ஆளுநர்- உதயநிதி ஸ்டாலின்

- சட்டசபை தேர்தல் நேரத்தில் பொதுவாக ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சியில்தான் போய் சேர்வார்கள்
- உங்களை பார்த்தால் எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரியத்தான் செய்யும்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3000-க்கும் மேற்பட்ட நா.த.க உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
நீங்கள் கழகத்தின் கொள்கையை ஏற்று இயக்கத்தில் சேர்ந்திருக்கின்றீர்கள். தி.மு.க. இன்று 75-வது ஆண்டில் பவள விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
நீங்கள் வந்து விட்டீர்கள், ஆனால் உங்களைப்போல ஆயிரக்கணக்கானோர் வருவதற்கு சில தயக்கத்தோடு அங்கு இருப்பார்கள். அவர்களிடம் எடுத்துச்சொல்லி, அத்தனை பேரையும் கழகத்தில் இணைக்க வேண்டிய முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.
சட்டசபை தேர்தல் நேரத்தில் பொதுவாக ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சியில்தான் போய் சேர்வார்கள். ஆனால் வித்தியாசமாக இன்று எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சியில் சேர்ந்துள்ள உங்களுக்கு எதிர்வரும் தேர்தலின் முடிவு தெரிந்து இருக்கும்.
உங்களை பார்த்தால் எதிர்க்கட்சிகளுக்கு வயிறு எரியத்தான் செய்யும்.
தமிழ்நாட்டின் அடையாளங்களை அழிக்க ஆளுநர் முயற்சி செய்கிறார். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, தமிழ்த்தாய் வாழ்த்தை கொச்சைப்படுத்துவது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என்று சட்டசபையில் சொல்வது, சட்டசபையை புறக்கணித்து செல்வது இதுதான் அவருடைய வேலை என்று அவர் கூறினார்.