என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![நாளை காதலர் தினம்- கோயம்பேட்டில் விற்பனைக்கு விதவிதமாக குவிந்த ரோஜா பூக்கள் நாளை காதலர் தினம்- கோயம்பேட்டில் விற்பனைக்கு விதவிதமாக குவிந்த ரோஜா பூக்கள்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9266545-flowers.webp)
நாளை காதலர் தினம்- கோயம்பேட்டில் விற்பனைக்கு விதவிதமாக குவிந்த ரோஜா பூக்கள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பூ விற்பனை கடைகளில் வழக்கத்தைவிட விற்பனை அதிகமாக இருக்கும்.
- காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான வகைகளில் பூக்கள் வந்து குவிந்து உள்ளன.
போரூர்:
காதலர் தினம் நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டை, சாக்லேட் உள்ளிட்ட விதவிதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்வது வழக்கம். இதனால் பூ விற்பனை கடைகளில் வழக்கத்தைவிட விற்பனை அதிகமாக இருக்கும்.
காதலர் தினத்தையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஓசூர், பெங்களூரு, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிகப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள் விதவிதமாக அதிக அளவில் விற்பனைக்கு குவிந்து உள்ளது. இதில் 20 எண்ணிக்கை கொண்ட (ஒரு பஞ்ச்) சிவப்பு ரோஜா- ரூ.450-க்கும், பேபி பிங்க், ஜூமாலியா, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற ரோஜாக்கள் வகைகள் ஒரு பஞ்ச்-ரூ.350-க்கும் விற்பனை ஆகிறது. வெளி மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் இதன் விலை 2 மடங்கு வரை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான வகைகளில் பூக்கள் வந்து குவிந்து உள்ளன. கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு புதிய பஸ்நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதால் புறநகர் மற்றும் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பூக்கள் விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது.