என் மலர்
தமிழ்நாடு

X
தேனி அருகே பேருந்து மீது வேன் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு
By
மாலை மலர்14 Feb 2025 8:04 AM IST

- பேருந்து மீது எதிரே சபரிமலையில் இருந்து வந்த கர்நாடக பதிவெண் கொண்ட வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
- 15க்கும் மேற்பட்டோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி அருகே மதுராபுரி பகுதியில் உள்ள திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், சேலம் மாவட்டத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்டோருடன் சபரிமலை கோவிலுக்கு சென்ற தனியார் பேருந்து மீது எதிரே சபரிமலையில் இருந்து வந்த கர்நாடக பதிவெண் கொண்ட வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X