search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்கள் பிரச்சனைகளுக்கான போராட்டங்களை முன்னெடுங்கள் - த.வெ.க.-வினருக்கு விஜய் உத்தரவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மக்கள் பிரச்சனைகளுக்கான போராட்டங்களை முன்னெடுங்கள் - த.வெ.க.-வினருக்கு விஜய் உத்தரவு

    • மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து மாவட்ட செயலாளர்கள் தலைமையில் போராட்டங்களை நடத்த வேண்டும்.
    • உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியதில் இருந்து மக்களை சந்திக்காமல் அறிக்கை மூலமாக விஜய் அரசியல் செய்து வருவதாக பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரச்சனை தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், ஆளுங்கட்சி உள்பட யார் தவறு செய்திருந்தாலும் தவறு எங்கே நடைபெறுகிறது என்பதை தெளிவாக தெரிந்து போராட வேண்டும். மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து மாவட்ட செயலாளர்கள் தலைமையில் போராட்டங்களை நடத்த வேண்டும். விருப்புவெறுப்பின்றி மக்கள் பிரச்சனையின் தீவிரம் உணர்ந்து மக்களுக்கு இடையூறின்றி உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    தஞ்சாவூர், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் பிரச்சனைகளை மையப்படுத்தி தமிழக வெற்றிக்கழகத்தினர் போராட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×