என் மலர்
தமிழ்நாடு
X
பரந்தூர் செல்லும் விஜய்- தவெக தொண்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு
Byமாலை மலர்19 Jan 2025 12:44 PM IST (Updated: 19 Jan 2025 12:48 PM IST)
- பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- ஏகனாபுரம் மக்களை சந்தித்து பேசுகிறார்.
பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை பரந்தூர் செல்கிறார். அங்கு ஏகனாபுரம் மக்களை சந்தித்து பேசுகிறார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுக்கு அதன் தலைவர் விஜய் வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
பரந்தூருக்கு நாளை தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் எனவும் நேரில் செல்ல உள்ளதால் பொதுமக்களும் அதிகளவில் வருவார்கள் என்பதால் வரவேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
X