என் மலர்
தமிழ்நாடு
X
விருதுநகர் வெடி விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
Byமாலை மலர்5 Feb 2025 9:45 PM IST
- பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
- வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டம் கன்னசேரிபுதூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பட்டாசு ஆலை வெடி விபத்தில் ராமலட்சுமி பலியான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
வெடிவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 6 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்" என்றார்.
Next Story
×
X