என் மலர்
தமிழ்நாடு
யார் அந்த சார் என்று கேட்டால் திமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது? - எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
- அண்ணா பல்கலை கழக மாணவர் விவகாரத்தில் யாரோ ஒரு முக்கிய நபர் உள்ளார்.
- கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவின் அனுதாபி என்று முதல்வர் கூறுகிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பொள்ளாச்சி விவகாரத்தில் 10 நாட்களுக்கு முன்பே புகார் கொடுக்கப்பட்டதற்கு என்ன ஆதாரம் உள்ளது? எந்த அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறுகிறார்?
பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு வெளிவந்தவுடன் எது உண்மை எது பொய் என்று நாட்டு மக்கள் அறிவார்கள்.
அண்ணா பல்கலைக் கழக மாணவர் விவகாரத்தில் யாரோ ஒரு முக்கிய நபர் உள்ளார். யார் அந்த சார் என்று கேட்டால் திமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவின் அனுதாபி என்று முதல்வர் கூறுகிறார்.
முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகளின் கருப்பு துப்பட்டாவை வாங்கி வைக்கும் அளவிற்கு அவர்களுக்கு பயம் இருக்கிறது