என் மலர்
தமிழ்நாடு
பர்கூர் தாமரைக்கரை மலைப்பகுதியில் சாலையில் உலா வரும் காட்டுயானை
- வனப்பகுதியை விட்டு யானை சாலையை கடந்து வேறு பகுதிக்கு செல்வதும் உண்டு.
- வன விலங்குகள் அவ்வப்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதும், சாலையை கடப்பதும் வழக்கம்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் யானை, மான், கரடி, சென்னாய் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவற்றில் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு யானை சாலையை கடந்து வேறு பகுதிக்கு செல்வதும் உண்டு.
இந்த சமயங்களில் சாலையில் சிறிது நேரம் நின்று சாலையோரம் உள்ள மூங்கில் தூரிகளை உடைத்து சுவைத்து விட்டு செல்லும். கடந்த 4 நாட்களாக மேற்கு மலை தாமரைக்கரை பகுதி சாலையில் ஒற்றை காட்டுயானை ஒன்று சாலையிலேயே நடந்து சென்றும், அந்த பகுதியில் உள்ள மூங்கில் தூர்களை சுவைத்தும், சாலையில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி பகல் நேரத்தில் சாலையில் உலாவருவதாகவும் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வரும் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றார்.
மேலும் இந்த ஒற்றை யானையால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நின்றும், வனப்பகுதிக்குள் யானை சென்ற பிறகு சாலையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள், மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது குறித்து வனத்துறையினர் வன விலங்குகள் அவ்வப்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதும், சாலையை கடப்பதும் வழக்கம்.
எனவே வாகனத்தில் செல்பவர்கள் வனப்பகுதிகளுக்குள் மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்போடும் செல்ல வேண்டும். மேலும் அங்கே சாலையைக் கடக்கும் விலங்குகளை படம் பிடிப்பது, அதன் அருகில் செல்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்.