என் மலர்
செய்திகள்
X
ஏர்டெல் இலவச டேட்டா மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு
Byமாலை மலர்24 Jun 2017 7:45 PM IST (Updated: 24 Jun 2017 7:45 PM IST)
ஏர்டெல் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த 30 ஜிபி அளவு இலவச டேட்டாவினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் அறிவித்த 30 ஜிபி இலவச டேட்டா, மாதம் 10 ஜிபி அளவு மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. மைஏர்டெல் செயலி மூலம் வழங்கப்பட்டு வரும் இலவச டேட்டா மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சலுகையை பயன்படுத்தி வருவோருக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்த சலுகையை மைஏர்டெல் செயலியை கொண்டு ஜூலை 1-ந்தேதி முதல் பெற முடியும். இதற்கான வேலிடிட்டி செப்டம்பர் 2017 என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஏர்டெல் உள்ளிட்ட நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது டேட்டா விலையை குறைத்தும், பழைய விலையில் கூடுதல் டேட்டாக்களையும் புதிய திட்டங்களின் பெயரில் வழங்கி வருகின்றன.
பிரீபெயிட் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள அன்லிமிட்டெட் காலிங், டேட்டா உள்ளிட்டவற்றை வழங்கும் புதிய திட்டங்களை அறிவித்தது. இத்துடன் கடந்த மாதம் 100 சதவிகிதம் கூடுதல் டேட்டாவினை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.
புதிய திட்டங்களின் கீழ் 1000 ஜிபி இலவச பிராட்பேண்ட் டேட்டா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. எனினும் புதிய சலுகைகள் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X