search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாய்ஸ் கால் + டேட்டா: ஏர்டெல் புதிய சலுகை அறிவிப்பு
    X

    வாய்ஸ் கால் + டேட்டா: ஏர்டெல் புதிய சலுகை அறிவிப்பு

    ஏர்டெல் நிறுவனம் மை-இன்ஃபினிட்டி எனும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் டேட்டா வழங்கும் புதிய திட்டம் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவனத்தின் மலிவு விலை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஜியோவுக்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்துள்ளது. போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் 50 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    புதிய ஏர்டெல் சலுகை புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த திட்டத்தி்ல் வழங்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத டேட்டா அடுத்த மாத பயன்பாட்டில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் செக்யூர் சர்வீஸ் சேவையை ஆறு மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும்.

    இந்த திட்டத்தில் மொபைல் போன் சேதமடைந்தால் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையத்தின் மூலம் சரி செய்து வழங்கப்படும். இத்துடன் மொபைல் போனில் உள்ள தரவுகள் பாதுகாக்கப்படுவதோடு, வெப் பாதுகாப்பு, ஆண்டிவைரஸ் உள்ளிட்ட சில சேவைகளை வழங்குகிறது.



    முன்னதாக ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 112 ஜிபி டேட்டா, தினமும் 4 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினசரி டேட்டா பயன்பாட்டில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. எனினும் 50 ஜிபி டேட்டா பயன்படுத்தியதும் ஒரு எம்பி டேட்டாவுக்கு 50 பைசா வசூலிக்கப்படும்.

    ஜியோ வழங்கும் ரூ.999 போஸ்ட்பெயிட் திட்டத்தில் தினசரி டேட்டா பயன்படுத்த எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இரண்டு மாத வேலிடிட்டி கொண்டுள்ள இந்த திட்டத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், இலவச ரோமிங் மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    Next Story
    ×