search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய சலுகை: 500 சதவிகிதம் கூடுதல் டேட்டா அறிவிப்பு
    X

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய சலுகை: 500 சதவிகிதம் கூடுதல் டேட்டா அறிவிப்பு

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் லூட் லூ என்ற பெயரில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இவை வாடிக்கையாளர்களுக்கு 500 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்குகிறது.
    புதுடெல்லி:

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு லூட் லூ என்ற பெயரில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. புதிய திட்டங்களின் மூலம் 60 சதவிகித தள்ளுபடி மற்றும் 500 சதவிகித கூடுதல் டேட்டா உள்ளிட்டவை, இன்று (நவம்பர் 1) முதல் வழங்கப்படுகிறது.

    புதிய சலுகைகள் ஜியோ தனது திட்டங்களின் விலையை மாற்றியமைத்ததை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பி.எஸ்.என்.எல். லூட் லூ திட்டங்களில் மொத்தம் ஏழு திட்டங்கள் ரூ.225,, ரூ.325, ரூ.525, ரூ.725, ரூ.799, ரூ.1125, ரூ.1525 உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றில் முறையே 500 எம்பி, 500 எம்பி, 3 ஜிபி, 7 ஜிபி, 15 ஜிபி, 30 ஜிபி, 60 ஜிபி மற்றும் 90 ஜிபி அளவு டேட்டா வழங்கப்படுகிறது.

    டேட்டா பயன்பாடு எவ்வித வேக கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. எனினும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இதுவரை 3ஜி நெட்வொ்க்கில் சேவையை வழங்குகிறது.



    வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மலிவு விலையில் சேவைகளை வழங்கி வருகிறோம் என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் ஆர்.கே. மிட்டல் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.99 திட்டத்தில் 250 எம்பி டேட்டா வழங்கும் திட்டத்தை ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு 799, 1125 மற்றும் 1525 திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 10 ஜிபி, 20 ஜிபி மற்றும் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ தனது போஸ்ட்பெயிட் திட்டங்களை மாற்றியமைத்தது. இவை வாடிக்கையாளர்களுக்கு ரூ.309 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்தது. பி.எஸ்.என்.எல். மட்டுமின்றி ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களும் புதிய சேவைகளை அறிவித்து வருகின்றன.
    Next Story
    ×