என் மலர்
செய்திகள்
X
120 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஷேர்இட் செயலி
Byமாலை மலர்24 Nov 2017 12:51 PM IST (Updated: 24 Nov 2017 1:01 PM IST)
உலகம் முழுக்க சுமார் 120 கோடி வாடிக்கையாளர்கள் ஷேர்இட் (SHAREit) செயலியை பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளில் தரவுகளை பரிமாற்றம் செய்ய உதவும் பிரபல செயலியான ஷேர்இட் உலகம் முழுக்க 120 கோடி வாடிக்கையாளர்கள் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மார்ச் 2014-இல் ஒரு கோடி பேர் டவுன்லோடு செய்திருந்த ஷேர்இட் செயலி வெறும் இரண்டறை ஆண்டுகளில் 120 கோடி பயனர்களை பெற்றுள்ளதாக ஷேர்இட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தில் கிடைக்கும் ஷேர்இட் செயலி கொண்டு ஸ்மார்ட்போன்களிடையே தரவுகளை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
உலகின் பிரபல செயலிகளில் ஒன்றாக ஷேர்இட் இருப்பதற்கு எங்களின் சர்வதேச பயனர்களுக்கு நன்றியும், பெருமையாக உணர்கிறோம். பெரும்பாலான சந்தைகளில் சமூக தரவுகளை ஒருங்கிணைந்து பரிமாற்றம் செய்யும் செயலிகளில் அனைத்து வயதினர் பிரிவுகளில் பிரபல செயலியாக இருக்கிறது.
இசை, வீடியோ, புகைப்படம், செயலி உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்போன்களிடையே பரிமாற்றம் செய்ய ஷேர்இட் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என ஷேர்இட் இந்தியா நிர்வாக இயக்குனர் ஜேசன் வாங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் 120 கோடி பயனர்களை கொண்டுள்ள ஷேர்இட் செயலியில் இந்தியாவில் மட்டும் 30 சதவிகிதம் பேர் அதாவது 30 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த செயலியில் பிராந்திய மொழிகளில் இயக்கும் வசதியை சேர்த்து வருகிறது. தற்சமயம் 39 நாடுகளில் 200க்கும் அதிகமான மொழிகளில் ஷேர்இட் பயன்படுத்த முடியும்.
ஷேர்இட் மேற்கொண்ட ஆய்வில் இந்த செயலியை 16 முதல் 28 வயதுடைய வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

Next Story
×
X