search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விரைவில் இந்தியா வரும் ஹானர் 9 லைட்: முழு தகவல்கள்
    X

    விரைவில் இந்தியா வரும் ஹானர் 9 லைட்: முழு தகவல்கள்

    ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    புதுடெல்லி:

    ஹூவாய் என்ஜாய் 7S ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதை தொடர்ந்து ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனினை டிசம்பர் 21-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் TENAA சான்றளிக்கும் தளத்தில் LLD-AL10 என்ற குறியீட்டு பெயரில் இதே ஸ்மார்ட்போனின் தகவல்கள் கசிந்திருந்தது.

    கிரின் 659 சிப்செட், கிளாஸ் பாடி, 13 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி பிளாஷ், 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமராவும், 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே போன்ற கேமரா அமைப்பு ஹானர் 9i ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    ஹானர் 9 லைட் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.65 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் கிரின் 659 பிராசஸர்
    - மாலி T830-MP2 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி பிளாஷ், 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 13 எம்பி செேல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி பிளாஷ், 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி

    புதிய ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் பிளாக், வைட், நீலம் மற்றும் கிரே நிறங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதன் முழுமையான அதிகாரப்பூர்வ விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.
    Next Story
    ×