search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசர வைக்கும் அம்சங்களுடன் லேப்டாப், வயர்லெஸ் மவுஸ் அறிமுகம்
    X

    அசர வைக்கும் அம்சங்களுடன் லேப்டாப், வயர்லெஸ் மவுஸ் அறிமுகம்

    பிராஜக்ட் லிண்டா மற்றும் ஹைப்பர்ஃபிளக்ஸ் என இரண்டு புதிய தொழில்நுட்பங்களை ரேசர் நிறுவனம் சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்திருக்கிறது.
    லாஸ் வேகாஸ்:

    ரேசர் நிறுவனம் பிராஜக்ட் லிண்டா மற்றும் ஹைப்பர்ஃபிளக்ஸ் என இரண்டு புதிய தொழில்நுட்பங்களை சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    பிராஜக்ட் லிண்டா என்பது 13.3 இன்ச் அளவு கொண்ட லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப் ஆண்ட்ராய்டு சார்ந்து இயங்கும் ரேசர் போன் மூலம் பயன்படுத்தும் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் சாதனங்களின் ஹைப்ரிட் கான்செப்ட் போன்று உருவாகியிருக்கும் பிராஜக்ட் லிண்டா, லேப்டாப்பில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை வழங்குகிறது. 

    ஹைப்பர்ஃபிளக்ஸ் என்பது முழுமையான வயர்லெஸ் தொழிலநுட்பம் மூலம் இயங்கும் மவுஸ் ஆகும். இந்த மவுஸ் இயங்குவதற்கான முழு மின்திறனையும் இதனுடன் வழங்கப்படும் மவுஸ் பேடில் இருந்தே எடுத்து கொள்கிறது. இந்த தொழில்நுட்பம் மவுஸ் மற்றும் அதற்கான மவுஸ் பேட் சாதனத்துடன் வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வயர்லெஸ் மவுஸ் சாதனத்தை தனியே சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.



    பிராஜக்ட் லிண்டா லேப்டாப்பில் மற்ற லேப்டாப்களில் வழங்கப்படும் டச்பேட் இருக்கும் பகுதியில், ரேசர் போனினை பொருத்த வழி செய்கிறது. இவ்வாறு செய்யும் போது ஒற்றை பட்டனை கிளிக் செய்து பிராஜக்ட் லிண்டாவை ஆண்ட்ராய்டு லேப்டாப் போன்று மாற்றி விடுகிறது. ஸ்மார்ட்போனின் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் 8 ஜிபி ரேம் சாதனத்தை சீராக இயங்க வழி செய்கிறது.

    இந்த லேப்டாப் 15 மில்லிமீ்ட்டர் மெல்லிய யுனிபாடி CNC அலுமினியம் சேசிஸ் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் டாக் செய்யப்பட்ட நிலையில் பிராஜக்ட் லிண்டாவின் எடை 1.25 கிலோவாக உள்ளது. இத்துடன் 13.3 இன்ச் குவாட் எச்டி தொடுதிரை வசதி மற்றும் பில்ட்-இன் கீ-போர்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    5.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ரேசர் போனினை டச்பேட் அல்லது இரண்டாவது திரை போன்று பயன்படுத்திக் கொள்ள முடியும். லேப்டாப் கீபோர்டில் ரேசர் க்ரோமா பேக்லைட் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பல்வேறு நிறங்களில் வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறங்களை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

    புதிய கான்செப்ட் லேப்டாப் 53.6Whr பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பேட்டரி டாக் செய்யப்பட்ட போனினை முழுமையாக மூன்று முறை சார்ஜ் செய்யலாம் என ரேசர் தெரிவித்துள்ளது. 200 ஜிபி மெமரி கொண்ட லேப்டாப் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், யு.எஸ்.பி. டைப்- ஏ போர்ட், யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் போர்ட், 720 பிக்சல் திறன் கொண்ட வெப்கேமரா, டூயல்-அரே மைக்ரோபோன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிராஜக்ட் லிண்டா சந்தையில் விற்பனைக்கு வருவது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.



    ஹைப்பர்ஃபிளக்ஸ் தொழில்நுட்பம் கிட்டத்தட்ட கொர்சேர் டார்க் கோர் RGB மவுஸ் மற்றும் கொர்சேர் MM1000 Qi வயர்லெஸ் சார்ஜிங் மவுஸ் பேட் போன்றதாகும். இந்த சாதனமும் சி.இ.எஸ். 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் Qi தர சார்ஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், ரேசர் ஹைப்பர்ஃபிளிக்ஸ் மவுஸ் பேடில் காந்த திறன் மூலம் மவுஸ்-க்கு நேரடியாக மின்சக்தியை பரிமாற்றம் செய்கிறது. 

    மவுஸ்-க்கு நேரடியாக மின்சக்தியை வழங்கும் முதல் சாதனமாக ஹைப்பர்ஃபிளிக்ஸ் இருக்கிறது என ரேசர் தெரிவித்துள்ளது. ரேசர் ஹைப்பர்ஃபிளிக்ஸ் வயர்லெஸ் வன்பொருள் காம்போ 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அமெரிக்காவில் ஹைப்பர்ஃபிளிக்ஸ் வன்பொருள் சாதனம் 249 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
    Next Story
    ×