என் மலர்
உலகம்
X
ஈராக்கில் பல்கலைக்கழக விடுதியில் தீ விபத்து: 14 பேர் பலி
Byமாலை மலர்9 Dec 2023 10:48 AM IST
- கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
- மாணவர்கள், விடுதி ஊழியர்கள் வெளியே ஓடினர். ஆனால் பலர் கட்டிடத்துக்குள் சிக்கி கொண்டனர்.
ஈராக்கின் வடக்கு பகுதியான எர்பில் உள்ள சோரன் பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குள்ள விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த நிலையில் பல்கலைக்கழக விடுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஒரு அறையில் தீப்பிடித்து மற்ற அறைகளுகுகு வேகமாக பரவியது.
கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் மாணவர்கள், விடுதி ஊழியர்கள் வெளியே ஓடினர். ஆனால் பலர் கட்டிடத்துக்குள் சிக்கி கொண்டனர்.
தீயணைப்பு வீரர்கள் வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
X