என் மலர்
செய்திகள்
X
கருப்பு பண மோசடி: ராஜபக்சே தம்பி கைது
Byமாலை மலர்7 Jun 2016 10:08 AM IST (Updated: 7 Jun 2016 10:08 AM IST)
கருப்பு பணத்தை மோசடி செய்து சொத்து வாங்கியதாக பசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழும்பு:
இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்த போது அவரது தம்பி பசில் ராஜபக்சே மந்திரியாக இருந்து வந்தார்.
ராஜபக்சே ஆட்சி காலத்தில் அவரது குடும்பத்தினர் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகவும் ஊழல் செய்து சொத்துக்களை குவித்ததாகவும் புகார் கூறப்பட்டது.
இதில், பசில் ராஜபக்சே மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. ஏற்கனவே அவர் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில விடுதலை செய்யப்பட்டு இருந்தார்.
இப்போது அவர் மீது கருப்பு பண மோசடி செய்து சொத்து வாங்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் பூகோடா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பசில் ராஜபக்சேவை ஆஜர்படுத்தினார்கள். அப்போது பசில் ராஜபக்சே சார்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கினார். எனவே உடனடியாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அதே நேரத்தில் பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story
×
X