என் மலர்
செய்திகள்
X
போரின் போது மாயமானவர்கள் குறித்து சான்றிதழ் வழங்க இலங்கை அரசு முடிவு
Byமாலை மலர்7 Jun 2016 11:07 PM IST (Updated: 7 Jun 2016 11:08 PM IST)
போரின் போது மாயமான இலங்கைத் தமிழர்களின் குடும்பத்தினருக்கு, மாயமடைந்தவர் குறித்த ‘இல்லாமை சான்றிதழை‘ வழங்குவதற்கு இலங்கை அரசு முடிவு செய்து உள்ளது
கொழும்பு:
2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற உச்ச கட்ட போர் முடிவுக்கு வந்தது. இந்த போரின் போது, ஏராளமானர் கொல்லப்பட்டனர். மேலும், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன என்பது என்ன தெரியவில்லை.இதனால், மாயமான நபர்களின் குடும்பத்தினர் பல்வேறு சிக்கல்களை அனுபவித்து வந்தனர்.
சொத்து பரிமாற்றம், சொத்துக்கான உரிமை கோருதல், இழப்பீடு கோருதல், சமூக நலத்திட்டங்களை பெறுவதற்கான தகுதி, ஓய்வூதியம், முடக்கப்பட்ட சொத்துக்களை மீட்பது போன்ற நடைமுறை சிக்கல்களையும் மாயமானவர்களின் குடும்பத்தினர் எதிர்கொண்டு வந்தனர்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இலங்கை அரசு புதிய வரைவு சட்டம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டத்துக்கு இலங்கை மந்திரி சபையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்தின் படி, மாயமான இலங்கைத் தமிழர்களின் குடும்பத்தினருக்கு, மாயமடைந்தவர் குறித்த ‘இல்லாமை சான்றிதழை‘ வழங்குவதற்கு முடிவு செய்து உள்ளது.

Next Story
×
X