என் மலர்
செய்திகள்
X
கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 73 தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை: இலங்கை மீன்வளத்துறை அமைச்சகம் தகவல்
Byமாலை மலர்23 July 2016 4:00 AM IST (Updated: 23 July 2016 4:01 AM IST)
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 73 பேர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அந்த நாட்டு மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கொழும்பு:
இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 73 பேரை கடந்த 6-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதினார். இதையடுத்து மத்திய அரசு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.
அதன் பேரில் இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசிடம் தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதன் பலனாக தமிழக மீனவர்கள் 73 பேர் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மீனவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து அந்நாட்டு மீன்வளத்துறை மந்திரி மகிந்தா அமரசவீரா கூறுகையில், கைதான மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்படுவார்கள். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை. இலங்கை கடல் பகுதியில் நிபந்தனையின் பேரில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படும் என்ற செய்தி உண்மைக்கு மாறானது. இது தொடர்பாக இலங்கை மீனவர்களை கலந்து ஆலோசித்த பிறகே எந்த முடிவும் எடுக்கப்படும் என்றார்.

Next Story
×
X