என் மலர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் போராட்டக் களத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: 50 பேர் பலி
Byமாலை மலர்23 July 2016 4:40 PM IST (Updated: 23 July 2016 4:54 PM IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 50 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தெஹ மஸங் சதுக்கத்தில் ஹசாரா சிறுபான்மையினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வழிப்பாதை திட்டத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஹசாரா சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
அமைதியாக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், அங்கு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனால் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். உயிருக்குப் பயந்து அனைவரும் அங்குமிங்கும் ஓடினர்.
இந்த தாக்குதலில் 50 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. மூன்று இடங்களில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story
×
X