என் மலர்
செய்திகள்
X
வருங்கால கணவரால் உயிருடன் புதைக்கப்பட்டு போராடி மீண்ட பெண்
Byமாலை மலர்23 July 2016 6:03 PM IST (Updated: 23 July 2016 6:03 PM IST)
பிரிட்டனில் வருங்கால கணவரால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண், அதிலிருந்து போராடி மீண்டு வந்தது தொடர்பான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
பிரிட்டனின் வேல்ஸ் நாட்டின் கோவர் தீபகற்பத்தில் உள்ள காஸ்வெல் கடற்கரை பகுதியில் ஸ்டேசி ஜில்லியம் (34) என்ற பெண் தனது வருங்கால கணவர் கீத் ஹக்சுடன் நடந்து சென்றபோது அவர்களுக்கிடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண்ணை ஹக்ஸ் அடித்து கழுத்தை நெரித்துள்ளார்.
இதனால், அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார். இறந்துவிட்டதாக கருதிய ஹக்ஸ், ஆழமில்லாத புதைக்குழியில் தள்ளி, புதர்ச்செடிகளை கொண்டு முடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் சுயநினைவு திரும்பியதும் அவர் தப்பி வந்து போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் ஹக்ஸ் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஸ்வான்சீ கிரவுன் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனினும், அவர் 8 ஆண்டுகள் கழித்து, உரிய விண்ணப்பம் செய்து பரோலில் வெளியே செல்ல முடியும்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ஜில்லியத்தை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு செய்யவில்லை என்றும், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கழுத்தை நெரித்ததாகவும், இறந்துவிட்டதாக நினைத்து அவளை புதைக்குழியில் தள்ளிவிட்டு புதைத்ததாகவும் ஹக்ஸ் கூறினார். எனினும் இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஆயுள் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பு வழங்கியபோது நீதிமன்றத்திற்கு ஸ்டேசி ஜில்லியம் வந்திருந்தார்.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த ஜில்லியம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து நினைவு கூர்ந்தார். கடுமையாக தாக்கப்பட்ட அவர் புதைக்குழியில் இருந்து மீண்டு உயிர்பிழைத்தது குறித்து கூறியதாவது:-
புதைக் குழியில் இருந்து சுயநினைவிற்கு வந்தபோது எங்கு இருக்கிறேன் என்று உணர முடியவில்லை. கண்களுக்கு புதர்ச்செடிகளும், அழுக்கான மணல் குவியல்களும் என் உடலுக்கு மேல் இருப்பது தெரிந்தது. என் இதயத் துடிப்பையும் அலைகளின் சத்தத்தையும் மட்டுமே என்னால் கேட்க முடிந்தது.
சரியாக சுவாசிக்க முடியாமலும் நகரக்கூட முடியாமலும் பதட்டமான நிலையில் இருந்த நான், புதைக்குழியிலிருந்து மேலே வருவதற்கு எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியே அடைந்தது. கடைசியில் முழு சக்தியையும் பயன்படுத்தி, மேற்பகுதிக்கு வந்தேன். அருகில் உள்ள கோல்ப் கிளப்பிற்கு வெளியில் மீண்டும் மயங்கிவிழுந்தேன். அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கோமா நிலைக்கு சென்ற நான் 26 நாட்கள் கழித்து அதிலிருந்து மீண்டு வந்தேன்.
என் வாழ்க்கையில் இதுபோல் நடக்கும் என்று ஒருநாளும் நினைத்ததில்லை. இதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் மீண்டும் என் வாழ்க்கையில் நடக்காது. இதிலிருந்து வெளியே வந்து, ஒரு புதிய வாழ்க்கையை எனது குடும்பம் மற்றும் நண்பர்கள் துணையுடன் வாழ விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×
X