என் மலர்
செய்திகள்
X
மலேசியாவில் 18 வயது சிறுவனை மணந்த 5 குழந்தைகளின் தாய்
Byமாலை மலர்28 Aug 2016 12:19 PM IST (Updated: 28 Aug 2016 12:19 PM IST)
மலேசியாவில் 18 வயது சிறுவன் 5 குழந்தைகளின் தாயாரை திருமணம் செய்து கொண்டார்.
கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள பியூபோர்ட் பகுதியை சேர்ந்தவர் அலின் என்கிற மடாலின் உதம் (52). இவரது மகன் மொசுத்சுபி அலின்.
அதே பகுதியை சேர்ந்தவர் தயாங் சோபியா குஸ்டி (42). இவர் 5 மகன்களின் தாயார். இவருக்கும், 18 வயது சுபி அலினுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இத்திருமணத்தில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
தனது 18 வயது மகன் 5 குழந்தைகளின் தாயாரை திருமணம் செய்தது குறித்து மணமகனின் தந்தை அலினிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்தது அவர், ‘‘அவர்கள் இருவரும் தங்களது சொந்த முடிவை மேற்கொள்ள போதிய முதிர்ச்சி உள்ளவர்கள்.
அதன்படி அவர்கள் திருமணம் செய்துள்ளனர். அவர்கள் தங்கள் உறவை சிறப்பான முறையில் தொடர வேண்டும். எனக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை. சுபி மீது சோபியா காதல் வயப்பட்டுள்ளார். இது கடவுள் எடுத்த முடிவு’’ என்றார்.
திருமணத்துக்கு முன்பு தனது மகன் சுபியுடன் அவர் மனம்விட்டு பேசினார். அப்போது ஒரு கணவருக்குரிய பொறுப்பு குறித்து அவனிடம் விளக்கினார்.
மேலும் தனது மனைவி மட்டுமின்றி ஏற்கனவே உள்ள 5 மகன்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story
×
X