என் மலர்
செய்திகள்
சுதந்திர நாடு கோரிக்கையை ஆதரிக்காதீர்கள்: ஹாங்காங் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சீனா எச்சரிக்கை
சுதந்திர நாடு கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று ஹாங்காங் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹாங்காங்:
இங்கிலாந்து கட்டுப்பாட்டிற்குள் இருந்த ஹாங்காங் நகரம், 1997-ம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் இரண்டில் ஒன்றானது. மற்றொன்று மக்காவ் ஆகும்.
சீனாவின் பிற பகுதிகளுக்கெல்லாம் ஒரு நீதித்துறை என்றால், ஹாங்காங்கிற்கு தனியானதொரு நீதித்துறை. 1997-க்குப் பிறகும்கூட ஹாங்காங் வாசிகளுக்குப் பல சட்ட உரிமைகளை அளிக்கும் வகையில் ஓர் அடிப்படை விதி (Basic law) உருவாக்கப்பட்டது.
சீனாவின் ஒரு பகுதியாக சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு இருந்தாலும், ஹாங்காங்கின் கலாச்சாரம் பலவிதங்களில் மாறிவிட்டது. பிரிட்டனின் ஆட்சியில் ஹாங்காங் மக்கள் வேர்களில் இருந்து விலகி புதிய நடத்தைகளை வளர்த்துக் கொண்டு விட்டார்கள்.
இதனால் ஹாங்காங் நகர் முழுவதுமாக சீனாவில் இருந்து பிரிந்து தனி நாடாக மாற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் அவ்வவ்போது எழுந்து வந்தது. இதனை சீன அரசு அவ்வவ்போது தலையிட்டு ஒடுக்கியது.
இந்நிலையில், ஹாங்காங்கில் கடந்த வாரம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சீன எதிர்ப்பு ஆர்வலர்கள் சில இடங்களில் வெற்றி பெற்றனர்.
2014-ம் ஆண்டு ஜனநாயக ஆதரவு போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற மிகப்பெரிய தேர்தல் இது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ தலைவர்கள் சிலர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். 70 தொகுதிகள் கொண்ட ஹாங்காங்கில் 5 இடங்களை சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், சுதந்திர நாடு கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று ஹாங்காங் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிநாடு என்ற கோரிக்கையை ஹாங்காங் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எழுவதை பொறுத்துக் கொள்ள முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Next Story