என் மலர்
செய்திகள்
X
சிங்கப்பூர் கடற்கரையில் இளம்பெண்ணின் வாயில் மதுவை ஊற்றி, கற்பழித்த இந்திய வம்சாவளி வாலிபருக்கு 11 ஆண்டு சிறை
Byமாலை மலர்3 Oct 2016 1:08 PM IST (Updated: 3 Oct 2016 1:08 PM IST)
சிங்கப்பூர் நாட்டில் கடற்கரையோர ரோந்துப் படையில் இடம்பெற்றிருந்தபோது, ஆசிரியையாக வேலைபார்த்துவந்த இளம்பெண்ணின் வாயில் மதுவை ஊற்றி, மயக்கநிலையில் இருந்த அவரை கற்பழித்த குற்றத்துக்காக இந்திய வம்சாவளி வாலிபருக்கு 11 ஆண்டு சிறையும் 12 சவுக்கடிகளும் தண்டனையாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூர்:

சிங்கப்பூர் நாட்டில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியினரான பிராம் நாயர் (27) என்பவர் அந்நாட்டின் கடலோர ரோந்துப் படையில் பணியாற்றி வந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி, இங்குள்ள சிலோசோ கடற்கரை பகுதியில் இரவுப்பணியில் இருந்த அவர், அதே கடற்கரையில் தனது நண்பருடன் போதையில் சுற்றிக் கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க அழகிய இளம்பெண்ணை கண்டார்.
ஆசிரியையாக வேலை செய்துவந்த அந்த இளம்பெண்னுடன் இருந்த நண்பரை மிரட்டி, அங்கிருந்து விரட்டிவிட்ட பிராம் நாயர், அரைபோதையில் இருந்த அந்தப் பெண்ணை அங்கிருந்து சற்று தூரத்தில் உள்ள ஆள்நடமாட்டம் குறைவான கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அந்தப்பெண்ணை அடையும் முயற்சியில் வற்புறுத்தி அவரது வாயில் மதுவை ஊற்றினார். மயக்க நிலையில் இருந்த அவரை ரோந்துப் பணியில் இருந்த காவலர் மிருகத்தனமாக கற்பழித்து கொண்டிருப்பதை பார்த்த சிலர், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
வாயில் நுரை தள்ளியபடி மயக்க நிலையில் கற்பழிக்கப்பட்டபடி நிர்வாணமாக கிடந்த அந்தப் பெண், பின்னர் அப்பகுதி வழியாக வந்த சிலரால் காப்பாற்றப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை தேறி வீடு திரும்பினார்.
இந்த கற்பழிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பிராம் நாயர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர்மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
போதையில் இருந்த அந்த இளம்பெண் தன்னுடன் உல்லாசமாக இருக்க விரும்பி அழைத்ததால் தனது கட்சிக்காரர் அவருடன் உடலுறவு வைத்து கொண்டதாகவும், பலவந்தமாக அவரை கற்பழிக்கவில்லை என்றும் பிராம் நாயர் சார்பாக இவ்வழக்கில் ஆஜரான வக்கீல் வாதாடினார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த அரசுதரப்பு வக்கீல் கவிதா உத்ராபதி, போதையில் இருந்தார் என்ற காரணத்துக்காக அந்தப்பெண் உடலுறவுக்கு அழைத்தார் என்பதை ஏற்றுகொண்டால் ஆசிய நாடுகளில் போதையில் இருக்கும் பெண்கள் எல்லாம் உடலுறவுக்கு ஆசைப்பட்டு மற்றவர்களை அழைப்பவர்கள் என்பதுபோன்ற கருத்து உண்டாகிவிடும்.
எனவே, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக 16 ஆண்டுகள் சிறைக்காவலும் 15 சவுக்கடிகளும் விதிக்கப்பட வேண்டும் என நீதிபதியிடம் வலியுறுத்தினார்.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, குற்றவாளி பிராம் நாயருக்கு 11 ஆண்டு சிறைவாசமும், 12 சவுக்கடிகளும் தண்டனையாக விதித்து இன்று தீர்ப்பளித்தார்.

Next Story
×
X