என் மலர்
செய்திகள்
X
பாரிஸ் சொகுசு ஓய்வு இல்லத்தில் நடிகை கிம் கர்டாஷியானிடம் கோடிக்கணக்கான நகைகள் கொள்ளை
Byமாலை மலர்3 Oct 2016 2:02 PM IST (Updated: 3 Oct 2016 2:02 PM IST)
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி கிம் கர்டாஷியானிடம் துப்பாக்கி முனையில் கோடிக்கணக்கான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ்:

அமெரிக்காவின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்துவரும் கிம் கர்டாஷியான்(35) கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வசித்து வருகிறார்.
சமீபத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற பாரிஸ் நகரில் உள்ள மேடலைன் சர்ச் அருகாமையில் உள்ள சொகுசு ஓய்வு இல்லத்தில் தங்கியுள்ளார்.
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த ஓய்வு இல்லத்துக்குள் புகுந்த ஐந்து மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் அங்கிருந்தவர்களை மிரட்டி கிம் கர்டாஷியானிடம் துப்பாக்கி முனையில் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கொள்ளையின்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பாரிஸ் நகரவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
×
X