search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 28 பொதுமக்கள் பலி
    X

    கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 28 பொதுமக்கள் பலி

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரிய போர் விமானங்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 28 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரிய போர் விமானங்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 28 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.

    இந்நிலையில், அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து சிரிய விமானப்படையினரின் போர் விமானங்கள் டோவுமா, சாப்குவா ஆகிய பகுதிகளில் வான்வெளி தாக்குதலை நடத்தினர். ஆனால், இந்த தாக்குதலில் சுமார் 28 அப்பாவி பொதுமக்கள் பலியானதாக மனித உரிமை கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது. இதில், குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவார்கள் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக இது வரை சுமார் 3,20,000 பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும், 10 லட்சத்தினருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சொந்த இடத்தைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×