என் மலர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 80-ஆக உயர்வு
Byமாலை மலர்31 May 2017 2:51 PM IST (Updated: 31 May 2017 3:01 PM IST)
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே இன்று நடைபெற்ற லாரி குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 300-ஆக அதிகரித்துள்ளது.
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளி நாடுகளின் தூதர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பு உள்ளது. இதனால் இங்கு பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று காலை அங்கு தீவிரவாதிகள் லாரி குண்டு மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மிகப் பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்தது.
இச்சம்பவம் இந்திய தூதரகம் அருகே நடந்தது. இதனால் இந்திய தூதரகத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சேதம் அடைந்தன. இத்தாக்குதல் நடைபெற்றுள்ள பகுதியில் தான் ஜனாதிபதி மாளிகை மற்றும் வெளிநாட்டு தூதர்களின் வீடுகளும், உள்ளன. இதனால் அங்கிருந்த வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் நொறுங்கி சேதம் அடைந்தன.
இந்த கோர தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 50 என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், தற்போதைய நிலைப்படி பலியானவர்களின் என்ணிக்கை 50 ஆக அதிகரித்திருக்கலாம் என அந்நாட்டின் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடித்த பகுதி முழுவதும் ரோடுகள் மூடப்பட்டன. ஏராளமான கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. காயம் அடைந்தவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. சமீபகாலாக தலிபான்களுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X