என் மலர்
செய்திகள்
X
மாலத்தீவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கைது: நெருக்கடி நிலையால் பதற்றம்
Byமாலை மலர்6 Feb 2018 8:30 AM IST (Updated: 6 Feb 2018 2:14 PM IST)
மாலத்தீவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளனர். #Maldives
மாலே:
இந்தியாவையொட்டி கன்னியாகுமரிக்கு தெற்கே இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது மாலத்தீவு. கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருந்து 720 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தீவு அமைந்துள்ளது. இது தனிநாடு ஆகும்.
மாலத்தீவு முன்னேற்ற கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இதன் அதிபராக அப்துல்லா யாமீன் இருந்து வருகிறார். அவருக்கு எதிராக ஒரு தரப்பு மக்கள் செயல்பட்டு வந்தனர். மேலும், நீதிபதிகள், அதிகாரிகள் போன்றவர்களும் அதிபருக்கு எதிராக இருந்து வந்தார்கள்.
தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீனின் சகோதரர் அப்துல் கயூப் மாலத்தீவில் 1978 முதல் 2008-ம் ஆண்டு வரை 30 ஆண்டுகள் தொடர்ந்து அதிபராக இருந்து வந்தார். அவர் இருக்கும் வரை மாலத்தீவில் அமைதி நிலவி வந்தது.
2008 தேர்தலில் மாலத்தீவு ஜனநாயக கட்சியை சேர்ந்த முகமது நசீத் வெற்றி பெற்று அதிபர் ஆனார். அவர் 2012 பிப்ரவரி வரை ஆட்சியில் இருந்தார்.
இந்த நிலையில் முகமது நசீத்தின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி நடந்தது. ராணுவமும், துணை அதிபர் முகமதுவாசி உசேனும் கைகோர்த்து முகமது நசீத்தின் ஆட்சியை அகற்றினார்கள். முகமதுநசீத் கைது செய்யப்பட்டார். முகமது வாசித் உசேன் அதிபரானார்.
முகமதுநசீத் மீது தீவிரவாத குற்றச்சாட்டு, ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்டவை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. அதில் அவருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் ஜெயலில் அடைக்கப்பட்டிருந்தார். ஐ.நா. சபையின் தலையீடு காரணமாக அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
மாலத்தீவை விட்டு வெளியேறிய முகமதுநசீத் லண்டன் சென்று சில காலம் தங்கினார். பின்னர் இலங்கை சென்று அங்கு வசித்து வந்தார்.
முகமது நீத்துக்கு பிறகு ஆட்சிக்கு வந்த முகமது வாசித் உசேனின் ஆட்சி 2013 வரை நீடித்தது.
பின்னர் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கையின் போது முன்னாள் அதிபர் முகமதுநசீத் அதிக ஓட்டுகள் பெற்றிருந்தார். ஆனாலும் 2-வது சுற்று ஓட்டுகளை எண்ணியதில் அப்துல்லா யாமீன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக அப்போது கூறப்பட்டது. அப்துல்லா யாமீன் அதிபராக பதவி ஏற்றார்.
அவர் பதவிக்கு வந்ததில் இருந்தே மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் நிலவி வந்தது. ஆனாலும் 5 ஆண்டுகளாக அவரது ஆட்சி தொடர்கிறது. விரைவில் அங்கு தேர்தல் நடத்த வேண்டியது உள்ளது.
இந்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு மேலும் அதிகரித்து வருகிறது. இதை சரிசெய்வதற்கு அப்துல்லா யாமீன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
இதற்கிடையே முகமது நசீத் மீதான பழைய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இதை விசாரித்த கோர்ட்டு முகமது நசீத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 9 பேரையும் விடுவிக்க வேண்டும். அவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தமாக பாரபட்சமற்ற ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் அதிபர் யாமீனின் மாலத்தீவு முன்னேற்ற கட்சியை சேர்ந்த 12 எம்.பி.க்கள் அதிபருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள். அவர்கள் எதிர்க்கட்சிகளுடன் சேரும் நிலை ஏற்பட்டது. எனவே அதிபர் யாமீன் பெரும்பான்மை இழந்து ஆட்சியை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டது.
இதை தடுப்பதற்காக 12 எம்.பி.க்களையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து 12 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் 12 எம்.பி.க்கள் பதவி நீக்கம் செல்லாது என்று உத்தரவிட்டனர்.
ஒரு பக்கம் முன்னாள் அதிபர் முகமதுநசீத் மீதான வழக்குகளில் அவர் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு கூறியதுடன் தற்போது 12 எம்.பி.க்கள் பதவி நீக்கத்தையும் செல்லாது என்று அறிவித்ததால் சுப்ரீம் கோர்ட்டு தனக்கு எதிராக இருப்பதாக அதிபர் அப்துல்லா யாமீன் கருதினார்.
மேலும் தனது கட்சி எம்.பி.க்கள் எதிராக திரும்பியதால் ஆட்சியும் பறிபோகும் நிலை உருவானது. இதை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் அவசர நிலை பிரகடனம் செய்தார்.
அரசு விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடுவதால் 15 நாட்கள் மட்டும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அவர் அறிவித்தார். இதனால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டது. அவர்கள் தலைநகரம் மாலியில் ஒன்று திரண்டு அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியது. இதனால் அசாதாரண நிலை ஏற்பட்டது.
எனவே ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள அதிபர் அப்துல்லா யாமீன் பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக தனக்கு எதிராக நடந்து வரும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அப்துல்லா சயீத்தையும் மற்றொரு நீதிபதி அலிஅகமதுவையும் கைது செய்ய அவர் உத்தரவிட்டார்.
மாலத்தீவு ராணுவமும் போலீசும் அதிபருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகினறன. அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்தனர். சுப்ரீம் கோர்ட்டு முழுவதும் ராணுவமும் போலீசும் குவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி அப்துல்லா சயீத்தையும், நீதிபதி அலிஅகமதுவையும் அவர்கள் கைது செய்தார்கள். அவர்கள் மீது ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.
இதைக்கண்டித்து எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்காக மிளகு பொடி அடைக்கப்பட்ட குண்டுகளை வீசி கலைத்து வருகின்றனர். ஆனாலும், தொடர்ந்து மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் மாலத்தீவில் மோசமான நிலை உருவாகி இருக்கிறது. அதிபரின் ஆதரவாளர்களும், எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது.
மாலத்தீவில் அமைதி ஏற்படுத்த ஐ.நா. சபை, அமெரிக்கா ஆகியவையும் முயற்சியை மேற்கொண்டுள்ளன. இந்தியாவின் பக்கத்து நாடாகவும், இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடாகவும் மாலத்தீவு திகழ்ந்து வருகிறது. எனவே மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை இந்தியாவை கவலை அடைய செய்துள்ளது. இதனால் இந்தியாவும் அங்கு அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. #Maldives #tamilnews

Next Story
×
X