search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தன் கல்யாண நிகழ்ச்சியை நேரலையில் தொகுத்து வழங்கிய பாகிஸ்தான் நிருபர்
    X

    தன் கல்யாண நிகழ்ச்சியை நேரலையில் தொகுத்து வழங்கிய பாகிஸ்தான் நிருபர்

    பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது கல்யாண நிகழ்ச்சியை நேரலையாக தொகுத்து வழங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானைச் சேர்ந்த ஹனன் புஹாரி, சிட்டி 41 என்ற தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது. மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அவரது திருமணமானது சிட்டி41 தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டது.

    இதில், வித்தியாசமான செய்தி என்னவென்றால் புஹாரி தனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்களை பேச வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பேட்டி எடுத்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டு வைரலாக பரவி வருகிறது. இதனை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

    கல்யாண நிகழ்ச்சியில் புஹாரி மிகவும் ஆர்வத்துடன் பேட்டி எடுத்தது அவரின் கடமை உணர்ச்சியை காட்டுகிறது என சமூக ஊடகங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.  தனது சொந்த கல்யாணத்தை செய்தியாளர் தொகுத்து வழங்கியது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.

    Next Story
    ×