search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவர் 5 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு
    X

    இங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவர் 5 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு

    இங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவனை 5 நாட்களுக்கு பிறகு வெஸ்ட் மிட்லண்ட்ஸ் போலீசார் பத்திரமாக மீட்டனர். #Indianorigin #AbhimanyuChohan
    லண்டன்:

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரீந்தர் சோகான், நவதீதன் தம்பதி இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். இவர்களது 15 வயது மகன் அபிமன்யு சோகான் மத்திய இங்கிலாந்தில் உள்ள எட்டாம் அரசர் ஹென்றி பள்ளியில் பயின்று வந்தான். அபிமன்யு மாதிரி தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து வகுப்பறையில் முதல் மார்க் எடுத்துள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற அபிமன்யு வீடு திரும்ப வில்லை. இதனால் அச்சமடைந்த அபிமன்யு பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், அபிமன்யு மாதிரி தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து வகுப்பறையில் முதல் மார்க் எடுத்துள்ளார். இதனால் மற்ற மாண்வர்களால் ஏதேனும் ஆபத்து ஏற்படும் என எண்ணி எங்காவது சென்றிருக்கலாம் என தெரிவித்தனர். மிகவும் நன்றாக படிக்கும் அபுமன்யு வீட்டை விட்டு கண்டிப்பாக செல்ல மாட்டன் என அவர் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், காணாமல் போன அபிமன்யுவை வெஸ்ட் மிட்லண்ட் போலீசார் கெனில்வொர்த் நகரில் கண்டுபிடித்தனர். பின்னர் அபிமன்யு அவரது குடும்பத்தினருடன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். #Indianorigin #AbhimanyuChohan
    Next Story
    ×