search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொசாம்பிக் ஜனாதிபதி பிலிப் நியூசி
    X
    மொசாம்பிக் ஜனாதிபதி பிலிப் நியூசி

    மொசாம்பிக் ஜனாதிபதி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் நெரிசல்- 10 பேர் பலி

    மொசாம்பிக் நாட்டில் ஜனாதிபதி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
    மபுடோ:

    தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் நம்புலா நகரில் ஜனாதிபதி பிலிப் நியூசியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில், ஜனாதிபதியின் உரையைக் கேட்க ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதனால் அரங்கம் நிரம்பி வழிந்தது.

    ஜனாதிபதி தனது உரையை முடித்ததும் பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது. அப்போது விளையாட்டரங்கத்தில் இருந்தவர்கள் வெளியேறினர். மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாசலை நோக்கி சென்றபோது, கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலர் கீழே விழுந்தனர். மற்றவர்கள் அவர்கள் மீது ஏறி மிதித்துக்கொண்டு முன்னேறினர்.

    இந்த சம்பவத்தில் 6 பெண்கள், 4 ஆண்கள் என 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 85 பேர் காயமடைந்துள்ளனர்.

    மொசாம்பிக் அரசியலில் ஜனாதிபதி பிலிப் நியூசியின் பிரலிமோ கட்சி 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து வரும் நியூசி, தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
    Next Story
    ×