என் மலர்
செய்திகள்
X
இலங்கையில் பாராளுமன்றத்தை கலைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு
Byமாலை மலர்2 March 2020 11:16 AM IST (Updated: 2 March 2020 4:20 PM IST)
இலங்கை பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு ஏப்ரலில் பொதுத்தேர்தல் நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றார்.
இதையடுத்து அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். இதற்கிடையே இலங்கை பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு ஏப்ரலில் பொதுத்தேர்தல் நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்தன் கூறியதாவது:-
இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி ஒரு ஆண்டில் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. தற்போதைய பாராளுமன்றம் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி அமைக்கப்பட்டது.
முந்தைய அதிபராக இருந்த சிறிசேனா மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் சட்டத்தில் சில திருத்தங்களை செய்தனர்.
இதனால் அதிபர் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு அவருக்கான புதிய அரசை அமைக்கும் வகையில் தேர்தலை முன்னதாக நடத்த முடியாமல் உள்ளது. ஆனாலும் விரைவில் தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
X