என் மலர்
செய்திகள்
X
அபுதாபி அல் தப்ரா பகுதியில் 18 ஆயிரம் வன்னி மரக்கன்றுகள்- மாநகராட்சி சார்பில் நடப்பட்டது
Byமாலை மலர்20 Jun 2020 2:50 PM IST (Updated: 20 Jun 2020 2:50 PM IST)
அபுதாபியில் உள்ள அல் தப்ரா பாலைவன பகுதியில் மாநகராட்சி சார்பில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னி மரக்கன்றுகள் நடப்பட்டது.
அபுதாபி:
அபுதாபியில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை பகுதிகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் கடுமையான வறட்சியை தாங்கும் வன்னி மரக்கன்றுகள் பாலைவன மண்ணில் நடப்பட்டு வருகிறது.
வன்னி மரம் ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தியா, ஓமன், பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் உள்பட மேற்காசியாவிலும், தெற்காசியாவிலும் காணப்படுகிறது. இது அவரை இனத்தை சேர்ந்த ஒரு பூக்கும் மரமாகும்.
இது பிற்காலத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் பரவியுள்ளது. அரபி மொழியில் இதற்கு காப் என்று பெயர். சுமார் 400 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான மரங்கள் பஹ்ரைன் நாட்டின் பாலைவனங்களில் உள்ளது.
அதனை அடுத்து அமீரக பாலைவனம் மற்றும் வனப்பகுதிகளில் இந்த மரம் அதிகமாக காணப்படுகிறது. தண்ணீர் கிடைக்காத இடங்களில் கூட இந்த மரங்கள் செழிப்பாக வளருகின்றன. அதனால்தான் பல்வேறு வறட்சியான பகுதிகளில் இந்த மரக்கன்றுகள் நடுவதற்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த மரத்திற்கு 1000 ஆண்டுகால வரலாறுகள் உள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த மரத்தை அமீரக அரசு தேசிய மரமாக கொண்டாடி வருகிறது. இந்நிலையில் உலக பாலைவனத்தை பசுமையாக்கும் தினத்தை முன்னிட்டு அல் தப்ரா பாலைவன பகுதியில் 18 ஆயிரத்து 644 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதனை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் நட்டனர். இந்த மரங்கள் மூலம் பறவைகள், சிறு உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் பயன்பட உள்ளது. அமீரகத்தின் சகிப்புத்தன்மையின் அடையாளமாக இந்த மரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
×
X