என் மலர்
செய்திகள்
X
இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே
Byமாலை மலர்9 Aug 2020 11:06 AM IST
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலம், 4-வது முறையாக மகிந்தா ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5-ம்தேதி தேர்தல் நடைபெற்றது. 225 உறுப்பினர்களை கொண்ட இந்தத் தேர்தலில் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அந்த கட்சிக்கு 145 இடங்களும், கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைத்தன.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற மகிந்தா ராஜபக்சே இன்று நான்காவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான விழா கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் நடந்தது. இலங்கை அதிபர் கோத்தபக்ச ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மகிந்தா ராஜபக்சே 4-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். நாடாளுமன்றம் வரும் 20-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X